சில்லி பாய்ன்ட்....

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக  சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 5 ஆண்டுகளில்  38டெஸ்ட், 42ஒருநாள், 61டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. ஆனால் பாகிஸ்தானுடன் ஒருப்போட்டிக் கூட இல்லை.

* இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடட் அணியை உலகின் பெரிய பணக்காரரான எலோன் மாஸ்க் வாங்க உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

* கார் பந்தய வீரர்களான ஜார்ஜ் ரஸ்ஸல்(4வது ரேங்க்),  லூயிஸ்ஹாமில்டனுக்கு(6வது ரேங்க்) இடையில் அதிகரித்து வரும் பதற்றமும், போட்டியுணர்வும் இயல்பானதுதான்’என்று  மெர்சிடிஸ் கார் கம்பெனி முதலாளி டோட்டோ வோல்ஃப் தெரிவித்துள்ளார்.

* மெல்ட் வாட்டர் செஸ் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரர் பிரக்ஞானந்தா முதல் சுற்றில் ஈரான் வீரர் அலிரேசாவை வீழ்த்தினார். தொடர்ந்து நேற்று நடந்த 2வது சுற்றில் நெதர்லாந்து வீரர் அனீஷ் கிரியை 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.

ஃபிபா தடை: நீதிமன்றம் புதிய உத்தரவு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு(ஏஐஎப்எப்) நிர்வாகிகள் நியமனம்  தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  கூட்டமைப்பை  நீதிமன்றம் நியமித்த குழு நிர்வகித்து வருகிறது.  அதனை  3வது  நபரின் தலையீடு எனக் கூறி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(ஃபிபா)   ‘ஏஐஎப்எப்’அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது. அதனால் யு17 உலக  கோப்பபை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. அதனால்   உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தை  ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது.  அதனையடுத்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சந்திரசூட்  தலைமையிலான பெஞ்ச், ஃபிபா ரத்தை  நீக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து  எடுக்க ஒன்றிய அரசுக்கு ’உத்தரவிட்டது.  கூடவே வழக்கை வரும் 22ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

Related Stories: