மகாராஷ்டிராவில் ரயில்கள் மோதல் 50 பேர் காயம்

கோண்டியா: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் சரக்கு ரயில் பின்புறம் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் ரயிலின் 2ம் வகுப்பு பெட்டிகள் 3 தடம் புரண்டதால் அதில் இருந்த பயணிகளில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

‘சட்டீஸ்கரில் இருந்து ராஜஸ்தான் சென்று கொண்டிருந்த மாநிலம் ஜோத்பூருக்கு பயணிகள் ரயில் கோண்டியா அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி எதிரே நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: