ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இளைஞர்; அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகள்: தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை

மஸ்கட்: ஓமன் நாட்டில் தவிக்கும் இளைஞரும் அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகளும் தனித்தனியே வீடியோ வெளியிட்டு தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தை சேர்ந்த சுரேஷ் அவரது மனைவி பிரேமி, ஜோலன், சிசினா, ஆரவி என்ற மூன்று குழந்தைகளும் ஓமன் நாட்டில் வசித்தனர். அங்கு கொரோனா காரணத்தால் வேலை இழந்த இருவரும் குழந்தைகளுடன் நாடு திரும்ப இருந்தனர். அப்போது நிறுவனத்துடனான வழக்கு காரணமாக சுரேஷ் நாடு திரும்ப ஓமன் காவல்துறை அனுமதிக்கவில்லை.

இதனால் மனைவி பிரேமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். பின்னர் பொருளாதார நெருக்கடியால் தனது குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு சவூதி சென்றுவிட்டார். இந்நிலையில் தாய், தந்தையை பிரிந்து வாடும் குழந்தைகளும், ஓமனில் சிக்கி தவிக்கும் சுரேஷும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு தங்களை காப்பாற்றுமாறு தமிழக முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில் நிரபராதியான தன்னை இந்தியா கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர்மல்க சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தையை மீட்க வேண்டும் என சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் ஆகியோரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: