திருச்சி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

லால்குடி : லால்குடி மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு தலைமையாசிரியர் ஜெயராஜ் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் முன்னிலையில் லால்குடி செளந்தரபாண்டிய எம்எல்ஏ தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விலையில்லா சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து பனை விதை நடும் நிகழ்ச்சியையும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.

லால்குடி நகராட்சியில் ஆணையர் குமார் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் தேசியக் கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர். லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓக்கள் ஜோஸ்பின் ஜெயசிந்தா, ரவிச்சந்திரன் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினார். துணை தலைவர் முத்துச்செழியன் மற்றும் பலர் பங்கேற்றனர். புள்ளம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவலர் சாந்தி முன்னிலையில், தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ் கொடியேற்றி ஏற்றினார். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓக்கள் ராஜேந்திரன், மாதவன் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் தேசிய கொடியேற்றி ஏற்றினார்.

புள்ளம்பாடி பேருராட்சி அலுவலகத்தில் தலைவர் ஆலிஸ் செல்வராணி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கல்லக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் குணசேகர் முன்னிலையில், தலைவர் பால்துரை கொடியேற்றினார். லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் நடந்த பொது சமபந்தி விருந்தில் கோயில் செயல் அலுவலர் நித்தியா, ஆய்வாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

தொட்டியம்:காட்டுப்புத்தூர் பேரூராட்சியில், முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவா செல்வராஜ், செயல் அலுவலர் சாகுல்அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

தா.பேட்டை பேரூராட்சியில் தலைவர் தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் மயில்வாகனன், செயல்அலுவலர் அன்பழகன், தலைமை எழுத்தர் செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

திருவெறும்பூர்:திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள், இன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

துவரங்குறிச்சி:மருங்காபுரி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் பழனியாண்டி தேசிய கொடி ஏற்றினார். மருங்காபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் லட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். பொன்னம்பட்டி பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜ் தேசியக்கொடியை ஏற்றினார்.

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சட்டமன்ற வளாகம் முன்பு தேசியக் கொடியை ஏற்றினார். மணப்பாறை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இது போன்று துவரங்குறிச்சியில் அனைத்து பள்ளிகள் மற்றும் காவல் நிலையத்தில் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

தில்லைநகர்:திருச்சி மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் பொறுப்பு ராஜேஷ் கண்ணா தலைமையில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் கொடியேற்றினார், இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பைஸ் அஹமத், கமால், முத்துக்குமார், விஜயா ஜெயராஜ், நாகலட்சுமி நம்பி, பங்கஜம், சோபியா விமலா ராணி, நாகராஜ், விஜயலட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், ஆல்பர்ட், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், இப்ராஹிம், புஷ்பா, மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்.

முசிறி:முசிறி டிஎஸ்பி அலுவலகம் , மற்றும் காவல் நிலையத்தில் டிஎஸ்பி யாஸ்மின் தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.முசிறி தாசில்தார் அலுவலகத்தில் வட்டாட்சியர் சண்முகப்பிரியா, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கண்ணன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் ஆணையர் சந்திரசேகர் முன்னிலையிலும், நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆணையர் மனோகரன் முன்னிலையிலும்,

சார்நிலைக் கருவூலத்தில் உதவி கருவூல அலுவலர் ஜான்சிராணி, கிளை சிறைச்சாலையில் கிளை சிறை கண்காணிப்பாளர் மயில்வாகணன், சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மதியழகன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் கொளஞ்சிநாதன், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, அரசு மருத்துவமனையில் மருத்துவர் செந்தில்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆய்வாளர் சுமதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் கிளை மேலாளர் செல்லப்பன், முசிறி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பாரதி விவேகானந்தன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தீபா ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

துறையூர்:துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தொகுதி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியேற்றி பேசினார். எ.பாதர்பேட்டை, ஒக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.துறையூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி ஜெய்சங்கர் கொடியேற்றினார். துறையூர் மாவட்ட உரிமையியில் நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்குரைஞர் சங்கத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துறையூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார், தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் புஷ்பராணி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கொடியேற்றினர். துறையூர் நகராட்சியில் தலைவர் செல்வராணியும், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன்தாசும், உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதாமுத்துசெல்வனும் கொடியேற்றினர். துறையூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும், உப்பிலியபுரத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Related Stories: