தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்-மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல்

ஏலகிரி : தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால் மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து ஏலகிரி மலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.   எழில் மிகுந்த ஏலகிரி மலையில்  14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் தமிழ் புலவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏலகிரி மலை நான்கு மலை தொடர்களால் சூழப்பட்டு 14 கிராமங்களை கொண்ட தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, தொடர் விடுமுறையின் எதிரொலியால் ஏலகிரி மலையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும்  இங்கு படகு, இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மங்கலம் சுவாமிமலை போன்றவையும் மற்றும் இயற்கை சூழல் குளிர்ச்சியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதிக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் மலைப்பாதைகளில்  கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள்  கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து விளையாட்டு தலங்களிலும், மிகவும் அருகில் உள்ள இயற்கை பூங்காவிலும், படகு இல்லத்திலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.இதனால் அனைத்து தனியார்  விடுதிகளிலும்  ஹவுஸ்புல்   ஆனதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தவித்து வந்தனர். மற்றும் பொது இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: