நேரு, சாவர்க்கரை நினைவு கூர்ந்தார்

சுதந்திர தினவிழாவில்  பிரதமர் மோடி உரையாற்றுகையில்,‘‘இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.  மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகிப் அம்பேத்கர், சாவர்க்கர், நேரு, சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களை இந்தியா தற்போது நினைவு கூர்ந்து வருகிறது. மங்கள் பாண்டே தொடங்கி பிஸ்மில், பகத் சிங் போன்ற புரட்சியாளர்களும், பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜு,  ராணி லட்சுமி பாய்,ராணி சென்னம்மா, சுப்பிரமணிய பாரதி, ஜெயபிரகாஷ் நாராயண்,வேலு நாச்சியார் உள்ளிட்ட தலைவர்களும் விடுதலை போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியுள்ளனர்’’என்றார்.

Related Stories: