தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர் பயிற்சி

தைபே: அமெரிக்க எம்பி.க்களின் தைவான் வருகையால் ஆத்திரமடைந்துள்ள சீனா மீண்டும் போர் பயிற்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் வந்தார். இதனால் தைவானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா ஆத்திரமடைந்தது. தைவான் ஜலசந்தி உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளில் போர் விமானங்கள், போர் கப்பல்களுடன் 10 நாட்கள் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட தீவிர கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டது. தற்போது, நான்சி பெலோசி தைவான் வந்து 2 வாரங்கள் கடந்த நிலையில், அமெரிக்க எம்பி.க்கள் 5 பேர் குழு மாசசூசெட்ஸ் எம்பி எட் மார்கே தலைமையில் நேற்று முன்தினம் தைவான் வந்து இறங்கியது.

இக்குழுவானது தைவான் தலைவர்களை சந்தித்து வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த சில வாரங்களில் தைவான் ஜலசந்திக்கு போர் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் வருகையால் ஆத்திரமடைந்த சீனா தற்போது தைவானை சுற்றிய பகுதிகளில் மீண்டும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

Related Stories: