சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட பெர்சிமன் பழங்கள் சீசன் துவக்கம்

குன்னூர்:  நீலகிரி மாவட்டம்  குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட  ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழங்கள் சீசன் துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டம்  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை \”பெர்சிமன்’ பழ மரங்களும் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இந்த பழத்தில் சி வைட்டமின் அதிகமாக உள்ளது,  இந்த பழத்தை பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து கழுவி அதன் பிறகே சாப்பிட வேண்டும் மேலும் வயிற்றில் உள்ள கொடிய பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சர்க்கரை நோய்  மற்றும் இரத்த  அழுத்தத்தை கட்டுப்படுத்த கூடிய  மருத்துவ குணம் கொண்டது. பொதுவாக, ஜூலை  மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் பழ சீசன் இருக்கும். ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது‌. இந்த பெர்சீமன் பழம்  தமிழ்நாட்டில் குன்னூர் தட்ப வெப்ப நிலையில் மட்டும்  வளரக்கூடியது. தற்போது குன்னூர் பழப்பண்ணையில் பொ்சிமன் பழங்களின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.170 க்கு விற்கப்படுகிறது. பொதுமக்கள்  நேரடியாக இங்கு வந்து வாங்கி செல்லலாம் என தோட்டக்கலை துறையினர் தொிவித்துள்ளனர்.

Related Stories: