டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு 40ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு துறைகளுக்கு 6 வகையான பணிகளுக்கு 92 பேர் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2006 முதல் 2022ம் ஆண்டு வரை 17 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்காலத்தில் 8 முறை மட்டும் தான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. அது முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பை கடைபிடிப்பதில் உறுதியை காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்க கூடாது. இதை உணர்ந்து தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 ஆக உயர்த்த ஆணையிட வேண்டும்.

Related Stories: