அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்களம்  உறுதிமொழி  ஏற்றுக் கொண்டனர்.

ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார்  ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் நட்ராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளியின் உதவி தலைமையாசிரியை சத்குணா வரவேற்றார்.

இதில், 6 முதல் 12 வகுப்புவரை உள்ள மாணவர்கள்,  போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை அறிவேன்,  எனது குடும்பத்தாரையும்,  நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் நடுத்து நிறுத்துவேன்,  போதைக்கு அடிமையானவர்களை மீட்டு நல்வழிப்படுத்துவேன், போதைப்பொருளுக்கு எதிராக தமிழக அரசுக்கு துணைநிற்பேன் என மாணவர்களும், உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் வள்ளுவன் நன்றி கூறினார்.

Related Stories: