மின்சார சட்ட திருத்த மசோதாவால் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரூர்: மின்சார சட்ட திருத்த மசோதாவால், இலவச மின்சாரம் பாதிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, இந்த மசோதாவை வாபஸ் பெற திமுக போராடும். இந்த மசோதாவால் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றார்.

Related Stories: