கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி மருமகளை வெட்டி கொன்று தலையுடன் மாமியார் சரண்

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி அடுத்த கே.ராமாபுரத்தை சேர்ந்தவர் வசுந்தரா(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. இவரது கணவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது பெயரில் இருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை வசுந்தரா தனது பெயருக்கு மாற்றினார். இந்நிலையில், கணவர் இறந்த பிறகு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் சொத்துக்களை கள்ளக் காதலன் பெயரில் மாற்ற வசுந்தரா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாமியார் சுப்பம்மா, தனது வீட்டிற்கு நேற்று மதியம் சாப்பிட வசுந்தராவை அழைத்தார். அப்போது, சுப்பம்மா அவரது இளைய மகன் சந்து உதவியுடன் கத்தியால் வசுந்தரா தலையை துண்டாக வெட்டி எடுத்தார். பின்னர், அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சுப்பம்மா, சந்துவை போலீசார் கைது செய்தனர். கறுப்பு பிளாஸ்டிக் உறையில் தலை வைத்து சுப்பம்மா கொண்டு சென்றதை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

Related Stories: