தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகள் திருமண குற்றங்களை தடுப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் என பெரம்பலூரில் நடைபெற்ற மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக யுனிசெப் உள்பட தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.

இதில் பேசிய தோழமை தொண்டுநிறுவன இயக்குநர் தேவநேயன் தற்போது நாட்டில் 53 சதவீகித பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக வெளியான புள்ளி விவரங்களை சுட்டிகாட்டு இதற்கு செல்போன் உள்பட தகவல் தொடர்பு சாதனங்கள் அடைப்படை காரணமாக உள்ளதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதில் சேலம் மாவட்டம் முதலிடத்திலும், பெரம்பலூர் மாவட்டம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பூரணி  வேதனை தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் செய்வோருக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் அதிக பட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளதை சுட்டிகாட்டிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டனமில்லா தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்துரைத்தார்.

Related Stories: