காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..750 கைதிகள் தப்பியோட்டம்..!!

காங்கோ: மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதில் 750 கைதிகள் தப்பியோடிவிட்டனர். 5 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டின் பிடம்போ நகரில் மத்திய சிறையில் இந்த துணிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சிறையில் மொத்தம் 800 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போது திடீரென அங்கு வந்த கூட்டு ஜனநாயக கிளர்ச்சி படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறை வளாகம் முழுவதும் கலவர பூமி போல் ஆனது. 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 750 கைதிகள் தப்பியோடிவிட்டனர். சிறையில் தற்போது 50 கைதிகள் மட்டுமே தப்பியோடாமல் உள்ளனர்.

தப்பியோடிய 750 கைதிகளை தேடும் பணியில் காங்கோ ராணுவம் களமிறங்கியுள்ளது. சிறையில் கலவரம் ஏற்படுத்திய கூட்டு ஜனநாயக கிளர்ச்சி படையினர், மாலிகா பள்ளத்தாக்கில் இருந்து வந்தனர் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது இது முதல்முறையல்ல. காங்கோவின் வடக்கு சிபு மாகாணத்தில் உள்ள காங்பாயி சிறையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. தங்கள் கூட்டாளிகளை மீட்டு செல்ல முயன்ற போது 1300 கைதிகள் தப்பியோடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: