அசாமில் டிரோன் பைலட் பயிற்சி பள்ளி

கவுகாத்தி: வட கிழக்கு மாநிலங்களில், முதல் முறையாக அசாமில் டிரோன் பைலட் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள காலக்கட்டத்தில் மனிதனின் செயல்பாடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றான டிரோன், மக்களுக்கு பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவில் டிரோன் தயாரிப்பு, பயன்பாட்டை ஊக்குவிக்கவும், உலகின் முன்னணி டிரோன் தொழில்நுட்ப மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக அசாமில்  டிரோன் பைலட் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியை மாநில அமைச்சர் கேசப் மகந்தா, நேற்று துவக்கி வைத்தார்.

Related Stories: