பேச்சிப்பாறையில் இன்று உலக பழங்குடியினர் தின விழா: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

குலசேகரம்: உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலை விழா பேச்சிப்பாறை கடம்பமூடு பகுதியில் இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பழங்குயினர் மரபுப்படி கலை நிகழ்ச்சிகளுடன் அமைச்சரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஆதிதிராவிடர் பழங்குடியின அலுவலர் நாகராஜன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன தலைவர் சுரேஷ் சுவாமியார் காணி  தொகுத்து வழங்கினார்.

வன உரிமை சட்டக்குழு மாவட்ட உறுப்பினர் ராஜன்,  பழங்குடியினரின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, துணை வன அலுலவர் மனாசீர் ஹலீமா, உதவி வன அலுலவர் சிவகுமார், திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான்சன், குமரி மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், ஒன்றிய் துணை செயலாளர் டெய்சி, ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு ஒருங்கிணைப்பாளர் பெர்ஜின், வர்த்தக அணி துனை அமைப்பாளர் ஜே.எம்.ஆர். உள்பட பலர் கல்ந்து கொண்டனர்.

Related Stories: