வங்கதேசத்தில் பெட்ரோல் விலை 51% அதிகரிப்பு

தாகா: வங்கதேசத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் கடந்த 5ம் தேதி எரிபொருள் விலையை அரசு உயர்த்தியது.  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை 42.5 சதவீதமும், பெட்ரோல் மற்றும் ஓக்டேன் விலை முறையே 51.1 மற்றும் 51.7 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டதால் பொது போக்குவரத்து கட்டணமும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் தாகாவில் உள்ள நிக்ஹெட் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் திரண்டு எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் 48 மணி நேரத்திற்குள் எரிபொருளின் விலையை குறைக்க வேண்டும், பொது போக்குவரத்தில் பாதி கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: