நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது

நாங்குநேரி: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து முந்திரிக்கொட்டை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு குமரி மாவட்டம் குலசேகரத்திலுள்ள தனியார் முந்திரி கொட்டை உடைக்கும் தொழிற்சாலைக்கு ஒரு லாரி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. லாரியை குலசேகரத்தை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (37) என்பவர் ஒட்டி வந்தார். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நாங்குநேரி அடுத்துள்ள வாகைக்குளம் தேசிய நெடுஞ்சாலை உள்ள அணுகு சாலையில் ஓய்வெடுப்பதற்காக டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.

அப்போது லாரி நிறுத்தப்பட்ட இடத்தில் சுமார் மூன்றடியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது. இதில், டிரைவர் ராஜேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதன்பிறகு குலசேகரத்தில் இருந்து வந்த வேறு லாரிகள் முந்திரி கொட்டை மூட்டைகளை மாற்றி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையை ஒழுங்காக பராமரிக்காததே திடீரென பள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related Stories: