காமன்வெல்த் ஆண்கள் மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் தங்கப் பதக்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்தனர். எல்தோஸ் 17.03 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த நிலையில், அப்துல்லா 17.02 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார்.