மாற்றுத்திறனாளி சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது

தாம்பரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம், மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (22). இவர், திரிசூலம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.  திரிசூலம் பகுதியை சேர்ந்த 11 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது,  காளியப்பன்  அச்சிறுமியிடம்

பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது சிறுமியின் பெற்றோர்கள் திடீரென வீட்டுக்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் காளியப்பன் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம் மகளிர் போலீசார் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, காளியப்பனை நேற்று கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: