உத்தரகாண்டில் அக்டோபரில் இந்தியா - அமெரிக்கா மாபெரும் போர் பயிற்சி

புதுடெல்லி: இந்திய, அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட கூட்டு பயிற்சி வரும் அக்டோபர் மாதம் உத்தரகாண்டில் நடக்கிறது. அமெரிக்காவும், இந்தியாவும் தங்களின் ராணுவ உறவை பலப்படுத்த ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இரு நாடுகளின் பிரமாண்ட போர் பயிற்சி வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை உத்தரகாண்டில் நடக்கிறது. இந்த பயிற்சியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து அவசரகால செயல்பாடுகள், தாக்குதல்களை சமாளிக்க கருத்துகள் மற்றும் அறிவுசார் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வர்.

மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று இந்த மூத்த அதிகாரிகள் பயிற்சி அளிப்பர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு அமெரிக்க- இந்திய ராணுவம் கூட்டு பயிற்சி  அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவு வலுவடைந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் உத்தரகாண்டில் கூட்டு போர் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: