கே.வி.குப்பம் அருகே அரசு பள்ளியில் ஆபத்தான பழைய கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

கே.வி.குப்பம்:  கே.வி.குப்பம் அடுத்த  காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு  தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி  வளாகத்தில் உள்ள  பழைய கட்டிடம்  20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கூரை கீழே விழுந்து அபாயகரமான நிலையில் இருந்ததால் பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே பள்ளி வளாகத்திற்குள் புதிதாக வகுப்பறை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.  

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் சேதமடைந்த பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், கட்டிடத்தின் உறுதித் தன்மை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது.  மாணவ-மாணவிகள் கவனக்குறைவாக பழைய பள்ளி கட்டிடத்திற்குள் சென்று விளையாடினால் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: