கடலூர் அருகே 7 கோயில் மணிகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் பழமைவாய்ந்த அய்யனார் கோயில் உள்ளது. தற்போது புதியதாக கட்டப்பட்டு பிரமாண்டசிலை, 64 கிலோ எடையுள்ள பித்தளை மணி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 16 கண்காணிப்பு கேமராக்களும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கிராம மக்கள் கோயிலுக்கு சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

கோயிலில் இருந்த 64 கிலோ எடையுள்ள பித்தளை மணி மற்றும் 7 கிலோ எடையுள்ள 6 மணிகளையும் காணவில்லை. இவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயில் மணிகள் திருடு போனது தெரியவந்தது இதையடுத்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது 4 மர்ம நபர்கள் கோவில் மணியை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மணியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் மணியை திருடிச்செல்லும் காட்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: