தலக்காஞ்சேரி விதைப் பண்ணையில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

திருவள்ளூர்: தலக்காஞ்சேரியில் உள்ள விதைப்பண்ணையில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்  நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலக்காஞ்சேரி கிராமத்தில், ‘’கோ 51’’ நெல் விதைப்பண்ணையினை விதைச்சான்று உதவி இயக்குநர் நா.ஜீவராணி ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரி, விதை பண்ணைகளில் வயலாய்வு மேற்கொள்ளுதல், பயிர் விலகு தூரம் பராமரித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்ட விதையின் உண்மை தன்மையினை சரிபார்த்தல், பிற ரக கலவன்களை அகற்றி இனத்தூய்மையை பராமரித்தல், குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஆய்வின்போது திருவள்ளூர் விதைச்சான்று அலுவலர் அபிலாஷா, உதவி விதை அலுவலர் ஞானசேகர், உதவி வேளாண்மை அலுவலர் சிவபாரதி ஆகியோர் இருந்தனர்.

Related Stories: