வாங்கிய கடனை திருப்பாத வகையில் 5 ஆண்டில் ₹10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: நம்பர் ஒன் இடத்தில் மெஹுல் சோக்ஸி

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகள் கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகத் கே காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த தரவுகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே வங்கியில் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 10,306 ஆக உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் ரூ.7,110 கோடியும், எரா இன்ஃப்ரா இன்ஜினியரிங் ரூ.5,879 கோடியும், கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.4,107 கோடியும் பாக்கி வைத்துள்ளன.  

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி  வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளன. தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2021-22ல் ரூ.1.57 லட்சம் கோடியாகவும்,  2020-21ல் ரூ.2.02 லட்சம் கோடியாகவும், 2019-20ல் ரூ.2.34 லட்சம்  கோடியாகவும், 2018-19ல் ரூ.2.36 லட்சம் கோடியாகவும், 2017ல் ரூ.1.61 லட்சம்  கோடியாகவும் இருந்தது. செயல்படாத சொத்துக்கள் (என்பிஏ) 2018-19ல்  ரூ.2,36,265 கோடியிலிருந்து 2021-22ல் ரூ.1,57,096 கோடியாக குறைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: