ஆசிய கோப்பை டி20 அட்டவணை அறிவிப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கை நடத்தும் ஆசிய கோப்பை டி20 போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இலங்கையில் இந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த இத்தொடர், அங்கு நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக யுஏஇ மைதானங்களுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஆசிய கோப்பை டி20 தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் ஆக.27 முதல் செப். 11ம் தேதி வரை நடக்க உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. அதைத் தொடர்ந்து சூப்பர்-4 சுற்றும், அதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் துபாயில் செப்.11ம் தேதி நடக்கும் பைனலில் மோதும். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா ஆக. 28ம் தேதி பாகிஸ்தானையும், ஆக.31ல் தகுதிநிலை அணியையும் எதிர்கொள்கிறது.

Related Stories: