கூடுதல் கட்டிடம் கட்டி தர வலியுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு; ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு  கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு செய்தனர். அவர்களிடம்  பி.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே.பேட்டை அடுத்த  அம்மனேரி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உளளது. இங்கு  98 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் உள்ளது. இருப்பினும் பழுதடைந்து காணப்படுவதால்  கூடுதல் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் நேற்று மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு செய்து பள்ளி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் செ.செ.சேகர், வட்டார கல்வி அலுவலர்  வெங்கடேசுலு ஆகியோர்  மாணவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கூடுதல் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிளித்தார். இதை ஏற்று மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Stories: