ஆர்ஜிதம் செய்யாமல் பட்டா நிலத்தில் சாலை அமைக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆர்ஜிதம் செய்யாமல் விவசாய பட்டா நிலத்தில் சாலை அமைக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூர் கோபாலபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விருதுநகர் வட்டம், எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் 3.75 ஏக்கர் பட்டா நிலத்தை கிரையம் ெசய்து வாங்கியுள்ளேன். இதில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலம் தொடர்பான அனைத்து வருவாய் ஆவணங்களும் என் பெயரில் உள்ளன. கடந்த ஜூன் 26ல் குச்சம்பட்டி ஊராட்சி சார்பில் என் விவசாய நிலத்தின் நடுவே தார்ச்சாலை அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதை நம்பியே எனது வாழ்வாதாரம் உள்ளது. எனவே, விவசாய நிலத்தில் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ‘‘மனுதாரரின் பட்டா நிலத்தில் சாலை அமைக்க வேண்டும் என்றால் சட்டப்படி அவரின் ஒப்புதல் இருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நிலத்தை ஆர்ஜிதம் செய்திருக்க வேண்டும். இதை தவிர்த்து மூன்றாவதாக எந்த வழியும் இல்ைல. இவையின்றி மனுதாரரின் பட்டா நிலத்தில் சாலை அமைக்க முடியாது. எனவே, சாலை அமைக்கும் பணியை நிறுத்த ேவண்டும். இந்த மனு அனுமதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: