மதுரையில் சாலையோர பட்டாசு கடைகளுக்கு அனுமதியில்லை: காவல்துறை அறிவிப்பு

மதுரை: தீபாவளியையொட்டி மதுரையில் சாலையோர பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்ட விதிமுறைகளின் படி பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் கடை உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று மற்றும் உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் ஆகியவை அந்த விண்ணப்பத்துடன் இணைத்து மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்தில் 09-09-2022-க்குள் சமர்ப்பிக்க  வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

முழுமையாக அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளையும் இணைத்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பத்தில் உள்ள இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சோதனை நடத்திய பிறகே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். முக்கியமாக சாலை ஓரங்களில் உள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: