சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ் சென்னை வருகை: ரூ.200 கோடி மதிப்புள்ள சமூக நல திட்டங்கள் தொடக்கம்!

சென்னை: சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ் சென்னைக்கு வருகை தந்து ரூ.200 கோடி மதிப்புள்ள சமூக நல திட்டங்களை தொடங்கிவைத்தார்.

117 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் பன்னாட்டு தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கத்தின் முதல் பெண் சர்வதேச ரோட்டரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிஃபர் ஜோன்ஸ், பதவியேற்ற முதல் மாதத்தில் உலகில் பெரிய ரோட்டரி மாவட்டமான சென்னைக்கு வருகைதந்து ரூ 200 கோடி மதிப்புள்ள சமூக நல திட்டங்களை தொடங்கிவைத்தார். உலகளவில் பெரிய ரோட்டரி மாவட்டமாக சென்னை திகழ்ந்து வருகிறது.

கடந்த வருடத்தில் மட்டும்  11.92 லச்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 64.7 கோடி மதிப்புள்ள 6177 சேவை திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளது சென்னை ரோட்டரி(3232) . சென்னை லிவர் பவுண்டேஷன்   மற்றும்  ரோட்டரி மாவட்டம் 3232 இணைந்து நடத்தும் “ஒரு மில்லியன் ஹெபடைடிஸ் தடுப்பூசி இயக்கத்தை” செவ்வாய்(26.07.2022) அன்று   தொடங்கி வைத்த அவர் கூறியதாவது,

போலியோ ஒழிப்புத் திட்டத்தில் ரோட்டரியின் அனுபவம், உடல்நலம் தொடர்பான பிற சவால்களைச் சமாளிப்பதற்கான வலிமையையும் கட்டமைப்பையும் ரோட்டரி பெற்றுள்ளது . மேலும் இந்திய  ரோட்டரி சங்கத்தில் பெண்களின் பங்கு என்பது 16% உள்ளது பாராட்டத்தக்கது . இது வருங்காலங்களில் பல மடங்கு  அதிகரிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் திரு மு.க ஸ்டாலின்  மரியாதை நிமித்தமாக சந்தித்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஹெபடைடிஸ், போலியோ மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய் தடுப்பு ஆகியவற்றை பற்றி அவருடன்  கலந்தாலோசித்ததாக கூறினார். மேலும் ரோட்டரி சங்கம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மார்பக புற்றுநோய் கண்டறியும் திட்டத்தில் இயங்கிவருகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: