கறம்பக்குடி பேரூராட்சி 5 வது வார்டு பகுதியில் பழுதான மின் கம்பம் மாற்றியமைப்பு-அரசுக்கு பொது மக்கள் பாராட்டு

கறம்பக்குடி : கறம்பக்குடி பேரூராட்சி 5வது வார்டு பகுதியில் பழுதான மின்கம்பம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாற்றியமைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த 15 வார்டு பகுதியில் வணிக நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள்,அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள 5வது வார்டு பகுதியில் பொது மக்களின் கோரிக்கையான மின் கம்பம் புதிதாக அமைக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் 5வது வார்டு பகுதியில் உள்ள வடக்கு புது தெருவை சேர்ந்த பொது மக்கள் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளோம் என்று கூறி பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரி தற்போது உள்ள திமுக அரசிடமும் பேரூராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் படி உடனடியாக 5வது வார்டு வடக்கு புது தெரு பொது மக்களின் நலன் கருதி பேரூராட்சி திமுக தலைவர் முருகேசன், துணை தலைவர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் 5 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ஜன்னத் பேகம் மற்றும் கவுன்சிலர்களின் சீரிய முயற்சியில் மின் வாரிய துறை அலுவலர்கள் உடனடியாக பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்தனர்். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி தந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: