காமன்வெல்த்தில் முதல்முறையாக மகளிர் டி20: தங்கம் உறுதி என்கிறார் மந்தனா

லண்டன்: காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்லும் என துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8 வரை நடக்கிறது. இ்ம்முறை முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் டி20, இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அறிமுகம் ஆகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்படோஸ் அணிகள் இடம் பெற்றுள்ள ‘ஏ’ பிரிவில் இந்திய அணி உள்ளது. வரும் 29ம் தேதி ஆஸ்திரேலியா, 31ம் ேததி பாகிஸ்தான், ஆகஸ்ட் 3ம் தேதி பர்படோஸ் அணிகளுடன் இந்தியா மோதுகிறது.

போட்டிகளுக்கான தீவிர பயிற்சியில் இருக்கும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், அணியின் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தானா, காமன்வெல்த் போட்டியில் வெற்றி வாய்ப்புகள் குறித்துக் கூறுகையில், ‘‘காமன்வெல்த் போன்ற மெகா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நமது வீராங்கனைகள் இந்தத் தொடருக்காக சிறப்பாக தயாராகி உள்ளனர். முழுத்திறமைையும் காட்ட ஆர்வமாக இருக்கின்றனர். கண்டிப்பாக காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கம் வாங்கும். நிச்சயமாக தங்கப்பதக்கம் வாங்குவோம்’’ என்றார்.

Related Stories: