பெரம்பலூரில் செஸ் போட்டி குறித்து 50 ஆட்டோ, 50 பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பணி

பெரம்பலூர் : பெரம்பலூரில் செஸ் போட்டிக ள்குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை - அரசு பஸ் கள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடப்பிரியா பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இது வரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இ ந்த ஒலிம்பியாட் போட்டியில், உலகின் முதல் நிலை கி ராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கல ந்து கொள்ள உள்ளனர்.ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தெரியும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விழிப்புணர்வுப் பணிகள் அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொ ண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத் தின்சார்பில் பொதுமக்களு க்கு விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம் பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளில் செஸ் போட்டி நடத்துதல், வி ழிப்புணர்வுப் பேரணி, மாரத்தான், கையெழுத்து இயக்கம், ஓவியம், தன் புகைப் படம் எடுத்தல், உறுதிமொ ழி, வண்ணக் கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக நேற்று புதுபஸ் ஸ்டாண்டில் 50 ஆட்டோக்களில் நம்ம செஸ் நம்ம பெருமை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கண்ணைக் கவரும் வகையிலான ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் 50 அரசு பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பிரம்மாண்ட ஸ்டிக்கர்களை பஸ்களின் பின்புறம்ஒட்டி விழிப்புணர் வுப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக் டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி, பெரம்பலூர் அரசுப் போக்குவரத்து கழக கோட்டமேலாளர் ராமநாதன், கிளை மேலாளர் ராஜா உள் ளிட்டபலர் உடனிருந்தனர்.

Related Stories: