டெல்லி மருத்துவமனையில் திருச்சி சிவா எம்பி அட்மிட்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மருத்துவமனையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று பேசினார். நேற்று இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென உடல் சோர்வு, இடது தோள்பட்டையில் தசைபிடிப்பு வலி ஏற்பட்டது.

அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: