மீண்டும் தடுப்பூசி பிரச்னை: யுஎஸ் ஓபனில் ஆடுவாரா நோவாக்?

பெல்கிரேடு : கொரோனா தடுப்பூசி சர்ச்சை காரணமாக  அடுத்த மாதம் நடைபெற உள்ள யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசி போடுவதும், போடாததும் என் சுய விருப்பம். தடுப்பூசி போட்டேனா, இல்லையா என்பதை சொல்வதும் என் கருத்துரிமையை சார்ந்த விஷயம்’ என்ற தனது கொள்கை முடிவில்! உறுதியாக இருக்கிறார் ஜோகோவிச். இதனால் ஆஸி. ஓபனில் அவரால் களமிறங்க முடியவில்லை. அதன் பிறகு நடந்த பிரெஞ்ச் ஓபனில் 2வது இடம் பிடித்தவர், விம்பிள்டனில் சாம்பியன் பட்டமும் வென்றார்.

இந்த நிலையில், ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் அமெரிக்காவில் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழை தர வேண்டும் என்பதால் ஜோகோவிச்சுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நோவாக் ‘என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். யுஎஸ் ஓபனில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். யுஎஸ் ஓபனில்  விளையாட அவரை அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடத்தப்படும் ஆன்லைன் போராட்டத்தில்  நேற்று காலை வரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

Related Stories: