கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் விவகாரம் ஸ்டுடியோ சீல் அகற்ற வேண்டும்

சென்னை: கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் வெளியிட்ட கந்தசஷ்டி கவசம் தொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஸ்டுடியோவை கடந்த 2020 அன்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளாக ஸ்டுடியோ பூட்டி கிடக்கிறது. அந்த பொருட்களை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி கார்த்திக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.   இதையடுத்து மனுதாரர் சார்பில், சர்ச்சைக்குரிய எந்த வீடியோவும் தயாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று பிரமாணப்பத்திரம்  தாக்கல் செய்தார். இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கறுப்பர் கூட்டம் வழக்கில் பூட்டி சீலிடப்பட்ட ஸ்டுடியோவை திறக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Related Stories: