செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: எஸ்பி சுகுணா சிங் பங்கேற்றார்

மாமல்லபுரம், : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் செங்கல்பட்டு எஸ்பி சுகுணா சிங் ஆலோசனை நடத்தினார். மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்க உள்ள சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பங்கேற்க வரும், 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் செங்கல்பட்டு எஸ்பி சுகுணா சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எஸ்பி சுகுணா சிங் பேசுகையில், வீரர், வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், ரிசார்ட்களில் எந்த மாதிரி பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை வீரர்கள் தினமும் மாலை 2 மணியிலிருந்து 2.45 மணிக்குள் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள். போட்டிகள், மாலை 3 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணிக்கு முடியும். போட்டி முடிந்து, தங்கும் அறைக்கு செல்லும்போது, போக்குவரத்து சீர் செய்வது, டிராபிக் இல்லாமல் பார்த்து கொள்வது, தங்கும் இடம் வரை பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

Related Stories: