உலக துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்: ஸ்கீட்டில் கொரியாவின் சவாலை முறியடித்தார் இந்தியாவின் மைராஜ் கான்

சியோல்: தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் ஒரு தங்க பதக்கத்தை அறுவடை செய்துள்ளது. ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் கொரிய வீரரின் சவாலை முறியடித்து இந்தியாவின் மைராஜ் கான் தங்கத்தை கைப்பற்றியுள்ளார். தென் கொரியாவில் உள்ள

சான் குவாங்கில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான ஸ்கீட் இறுதி சுற்றில் கொரியாவின் மின்சு கிம்மை இந்தியாவின் மைராஜ் கான் எதிர் கொண்டார். மின்சு கிம் 3 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், 2 முறை ஒலிம்பிக் பதக்கங்களையும் கைப்பற்றியவர் ஆவார். ஆதலால், மைராஜ் கானுக்கு பதக்கம் என்பது சவாலான நிலையில் நேர்த்தியாக சுட்டு மின்சு கிம்மை 40க்கு 37 என்ற கணக்கில் தோற்கடித்தார். இங்கிலாந்தில் பேன் லிவினின் வெண்கல பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தங்க கணக்கு 5ஆக அதிகரித்துள்ளது. 5 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

Related Stories: