லடாக் எல்லை மோதல்: இந்திய - சீன ராணுவம் நாளை 16ம் சுற்று பேச்சு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு ஜூன்  15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவ வீரர்கள்  முயன்றனர். அதை தடுத்தபோது ஏற்பட்ட பயங்கர மோதலில்  20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பதற்றத்தைக் குறைக்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தை நடந்து உள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில்  படைகள் குறைக்கப்பட்டன.

 

சீனா சில கட்டுமானப் பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவை எச்சரித்தது. இந்நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையே நாளை, 16வது சுற்று பேச்சுவார்த்தை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதியான சுசூல் மோல்டா பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: