பெங்களூரு-காரைக்கால் எக்ஸ்பிரஸ் 25-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட பெங்களூரு-காரைக்கால் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் வரும் 25ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. வண்டி எண்- 16529 பெங்களூரு - காரைக்கால் வரை செல்லும் ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35க்கு சென்றடையும்.

இந்த ரயில் பையப்பனஹளி, பெலந்தூர் ரோடு, கார்மெலராம், ஹீலாலீஜ், அனேகால் ரோடு, ஓசூர், கீழமங்கலம், பெரியனகதுமை, ராயகோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவடி, முத்தாம்பட்டி, தொப்பூர், கருவாளி, செம்மண்டபட்டி, ஓமலூர், சேலம் ஜங்ஷன், சேலம் மார்க்கெட், சேலம் டவுன், அயோத்தியபட்டினம், மின்னம்பள்ளி, வாழப்பாடி கேட், எட்டப்பூர் ரோடு, பிடையன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், மெயின்யப்பனூர், சின்னசேலம், சிறுவாட்டூர், புக்கிரிவாரி, குட்டக்குடி, முக்கசபாரூர், விருத்தாலசம் ஜங்ஷன், உத்தங்கல்மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி, கடலூர் துறைமுகம் ஜங்ஷன், பரங்கிபேட்டை, சிதம்பரம், வல்லம்படுகை, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நெடூர், மயிலாடுதுறை ஜங்ஷன், பேரளம் ஜங்ஷன், நன்னிலம், திருவாரூர் ஜங்ஷன், நாகப்பட்டினம் ஜங்ஷன், நாகூர் ஆகிய இடங்களில் நின்று காரைக்கால் சென்றடையும்.

வண்டி எண் 16530 காரைக்கால்-பெங்களூரு செல்லும் ரயில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு இதே வழித்தடத்தில் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: