வங்கதேசம் ஒருநாள் தொடரை வென்றது: வெ.இண்டீசுக்கு பதிலடி

கயானா: வங்கதேச கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் விளையாடிய 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இப்போது 3ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு நாடுகள் விளையாடி வருகின்றன. முதல் ஒருநாள் ஆட்டத்தில் 6விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் களம் கண்ட வெ.இண்டீஸ் 35ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 108 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீமோ பால் ஆட்டமிழக்காமல் 25ரன் எடுத்தார். வங்க வீரர்கள் மெஹிதி ஹசன் 4, நசும் அகமது 3விக்கெட் வீழ்த்தினர்.

அதனையடுத்து 109ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வங்கம் 20.4ஓவரில்  ஒரு விக்கெட் இழப்புக்கு 112ரன் எடுத்து  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அந்த அணியில் ஆட்டமிழக்காமல்  கேப்டன் தமீம் இக்பால் 50*, லிட்டன் தாஸ் 32* ரன் விளாசினார். வெ.தரப்பில் குடகேஷ் மோதி ஒரு விக்கெட் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெ.இண்டீசுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த 2 அணிகளும் மோதும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நாளை நடக்கிறது.

Related Stories: