இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தை திட்ட இயக்குனர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில், காய்கறி கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத திட்டத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், அங்கு இயற்கை உரம் தயாரிக்கப்படுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் நேற்றுமுன்தினம் நேரில் ஆய்வு நடத்தினார். இயற்கை உரம் தயாரிப்பு முறைகள் குறித்து அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டார். மேலும், பணி ஆலோசனைகளையும் வழங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், புதுகும்மிடிப்பூண்டி ஊாரட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: