கருங்குழியில் ஸ்ரீராகவேந்திரா கோயிலில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: கருங்குழியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோயிலில் சத்யநாராயண பூஜை கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி மாதம் பவுர்ணமியையொட்டி, கருங்குழி பிருந்தாவன சித்தர் யோகிரகோத்தம சாமிகள் பக்தர்களை சந்திக்கும் 98வது பவுர்ணமி தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சித்தர் நல்லாசி வழங்கினார். காலை 11 மணி முதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் மந்திர உச்சரிப்புடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர்.

இதையடுத்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜை செய்து மகாதீபாராதனையை பக்தர்களுக்கு காண்பித்தார். இதில், கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தமா சாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: