வாலாஜாபாத் ஒன்றியத்தில் கிராம வளர்ச்சி பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளின் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கிராம வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில், ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புத்தாகரம், மருதம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நடப்பாண்டு பணிகள் மற்றும் சென்ற ஆண்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது, ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம், ஒன்றிய நடுநிலை பள்ளிகள், பள்ளிகளின் சமையலறைகள், நூலகம், கழிவறை என பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒன்றிய பள்ளிகளின் கட்டமைப்புகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போதிய கழிவறைகள் பள்ளி வளாகத்தின் சுகாதாரங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களைை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து  ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பள்ளியில் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவுக்காக சமைக்கப்பட்டிருந்த சமையலறையை ஆய்வு செய்வது மட்டுமின்றி அங்கு மாணவர்களுக்காக வழங்க தயாராக இருந்த உணவுகளையும் ருசித்து மட்டுமின்றி  சமையல்களிடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமும், சுத்தமாகவும் சமைக்கப்பட வேண்டும். சமையலறையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கண்டிப்பாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ராஜ்குமார், உதவி பொறியாளர் சார்லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா, ஒன்றிய குழு உறுப்பினர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், ரமேஷ் ஒன்றிய சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: