ஆனி மாத பூர்ணிமா பவுர்ணமியையொட்டி நெல்லையில் பக்தர்கள் கிரிவலம்

பேட்டை: ஆனி மாத பூர்ணிமா பவுர்ணமியையொட்டி நெல்லையில் நடந்த கிரிவலத்தில் பெண்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  ஆண்டுதோறும் பூர்ணிமா பவுர்ணமி தினம் பக்தர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை டவுண் அடுத்த குன்னத்தூர் அருகேயுள்ள சங்காணி கிராமத்தில் கிரிவலம் நடந்தது.

இதில் பெண்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருமுறை பாராயணம் பாடியபடி வலம் வந்தனர். இந்த கிரிவலமானது திருவேங்கடநாதபுரம், மேல குன்னத்தூர், கீழ குன்னத்தூர், சங்காணி வழியாகச் சென்று ராகு ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத கோதபரமேஸ்வரர் கோயில் முன்பாக நிறைவடைந்தது. சுமார் 6 கி.மீ. தொலைவிலான இந்த கிரிவல பாதையில் பங்கேற்ற அனைவரும் சுவாமி, அம்பாளை வணங்கி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: