ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை: பும்ரா மீண்டும் நம்பர் 1

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில், இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பும்ரா 718 புள்ளிகளுடன் 3 இடம் முன்னேறி நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். 2 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த பும்ரா, கடந்த பிப்ரவரி மாதம் டிரென்ட் போல்ட்டிடம் அந்த இடத்தை பறிகொடுத்து பின்தங்கினார். தற்போது இங்கிலாந்து மண்ணில் அமர்க்களமாக செயல்பட்டு வரும் அவர், மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கபில்தேவுக்கு பிறகு ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 பவுலராக முத்திரை பதித்த ஒரே இந்திய வேகம் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பின்னர்கள் மனிந்தர் சிங், கும்ப்ளே, ஜடேஜா ஆகியோரும் முதல் ரேங்க் வகித்துள்ளனர்.

Related Stories: