ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை முன்தினம் நடக்க உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளன. அப்போது, பட்டதாரிகள் (பிஇ உட்பட), டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளன. இதில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 16ம் தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள், மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் என நடக்க உள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: