சுகேஷ் சந்திர சேகர் வழக்கு: முழுவிவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கோரி சுகேஷ் சந்திர சேகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கு ஏற்கெனவே கோடைகால அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வேறு மாநிலத்திற்கு மாற்றும் பரிந்துரையை உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சுகேஷ் சந்திரசேகர் மாதந்தோறும் ரூ.1.20 கோடி சிறை அதிகாரிகளுக்கு அளித்ததாகவும், சிறையில் செல்லிடைபேசியை பயன்படுத்திக் கொள்வதற்காக, தன்னை மிரட்டி இந்த பணத்தை பறித்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், வேறு சிறைக்கு மாற்றம் செய்யக்கோரியும் மனு தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட நீதிபதி, சிறையில் உள்ள ஒரு கைதி எப்படி இதுபோன்ற வசதியை பெற முடியும்? மட்டுமல்லாமல், இவ்வளவு பணத்தை அவர் யார் மூலம், எந்த அரசு சிறை அதிகாரிகளுக்கு அளிக்கிறார்? என்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். எனவே இந்த விவகாரம் தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகர் முன்வைத்துள்ள குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை, நாங்கள் சும்மா விட போவதில்லை; எனவே லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் விவரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் எனவும், நீங்கள் லஞ்சம் அளித்தீர்களா? அல்லது சுகேஷ் சந்திரசேகரிடம் சிறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தார்களா? என்பதை நாங்கள் முழுமையாக அறிய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இந்த பெயர்கள் அடங்கிய முழு விவரத்தை, உச்சநீதிமன்றத்திற்கு அளிக்க சுகேஷ் சந்திரசேகர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 26-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.            

Related Stories: