கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கனா வழக்கில், மூதாட்டிக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா அடுத்த ஃபதேகர் ஜந்தியா கிராமத்தைச் சேர்ந்த மகிந்தர் கவுர் என்ற 70 வயது மூதாட்டி, புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவரைப் பற்றி கங்கனா தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து களைப் பதிவிட்டார். இதற்கு மகிந்தர் கவுர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தனது குடும்பத்துக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், 100 ரூபாய்க்காக நான் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரது சார்பில் பதிண்டா நீதிமன்றத்தில் அவதூறு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஐபிசி 499, 500 பிரிவுகளின் கீழ் மகிந்தர் கவுர் சார்பில் தாக்கல் செய்த புகாரின் பேரில், பிப்ரவரி மாதம் கங்கனா ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று பதிண்டா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கங்கனா சார்பில் பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி ஐமேத்தா, ‘வரும் செப்டம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு ள்ளது. கங்கனா வின் மனு தொடர்பாக மகிந்தர் கவுர் விரிவான பதிலளிக்க வேண்டும்’ என்று சொல்லி, அவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: