ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக 16 பள்ளி விடுதிகள், மாணவிகளுக்காக 9 பள்ளி விடுதிகள், கல்லூரி மாணவருக்காக ஒரு விடுதி செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி விடுதி மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 15ம் தேதி. புதிய மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 20ம் தேதி. கல்லூரி மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் கடைசி நாள் வரும் 25ம் தேதி. புதிய மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 5ம் தேதி. இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ராகுல்நாத் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: